முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடியாரிடம் வாழ்த்துப் பெற்ற வால்பாறை வழக்கறிஞர் ஐ.கணேசன்

அதிமுகவின் தலைமைக் கழகம் தற்போது மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அறிவித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை ஐ.கணேசன் வழக்கறிஞரை அதிமுகவின் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளராக நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி யாரை முன்னால் அமைச்சரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவரின் பணி சிறக்க பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.