கோவை அருகே உள்ள வெள்ளலூரில் நேற்று பா.ஜ.க சார்பில் மோடி ரேக்ளா ரேஸ் நடந்தது நடிகர் ராதிகா சரத்குமார் ரேக்ளாவண்டியில் ஊர்வலமாக சென்று தொடங்கி வைத்தார்..பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காளைகளை தெய்வ மாக நினைத்து குழந்தைகளைப் போல் வளர்த்து இது போன்ற போட்டிகளில் பங்கேற்கச் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. உழவன் மகன் படத்தில் நடித்த போது இதுபோன்ற ரேக்ளா பந்தயம் நடந்தது. அப்போது முதல் இப்போது வரை மக்கள் தொடர்ந்து ரேக்ளா பந்தயத்தை ரசித்து வருகிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இளைஞர்கள் செல்போனில் மூழ்கி கிடக்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும். இது போன்ற போட்டிகளில் அவர்கள் பங்கேற்க வேண்டும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்கள் காரை துரத்தி சென்று பெண்களை மிரட்டிய சம்பவம் மிகவும் வருத்தப்பட வேண்டியது. இதில் காவல் துறையும் மாநில அரசும் நடவடிக்கை மேற் கொண்டு பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பிரதமர்மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் மீது எப்போதும் அன்பும் ,மரியாதையும் உண்டு..எனவே ரேக்ளா பந்தயம் மைதானம் அமைப்பது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தால் நிச்சயம் நிறை வேறும்..தமிழக வெற்றி கழகம் 2.வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு தம்பி விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள், தங்கம், மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில்மாநில பொதுச் செயலாளர் ஏ. பி. முருகானந்தம், கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர். மாவட்ட பொதுச் செயலாளர் துரை, முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன், சிறுபான்மை அணி மாநில துணை தலைவர் ஜான்சன் வெள்ளலூர் மண்டல தலைவர் வரதராஜ் துரை , வேல் மயில்,ஆனந்த்,மற்றும் மகளிர் அணி ரேக்ளா குழுவினர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0