கஞ்சா விற்ற வாலிபர் – இளம் சிறார் கைது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை க்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலைய காவல்துறையினர் அங்குள்ள அவ்வையாா் நகா் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த ராஐா பிரபு மகன் சுஐி பிரபு (வயது 22) மற்றும் இளஞ்சிறார் ஒருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சுஐி பிரபுவைநீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் இளஞ்சிறார் ஒருவரை அரசு கூர்நோக்கு இல்லத்திற்கும் அனுப்பி வைத்தனர்.