உதகை; மத்திய சுற்றுச்சூழல் துறை வனம் மற்றும் காலநிலை மாற்றம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை காலநிலை மாற்றம் பள்ளி மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வின் ஒரு பாகமாக நீலகிரி மாவட்டம் மசினகுடி பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை மாணவர்கள் நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப் போம். வனங்களை, கானுயிர்களை பாதுகாப்போம், என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் 250 க்கு மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா உதகை அரசினர் மேல்நிலைப்பள்ளி மசனகுடியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் சசிகுமார் வரவேற்று பேசுகையில் ஓவியங்கள் வரையும் கலையானது ஒரு மாணவனை முழுமையான அறிவுத்திறனுக்கு நல்ல சிந்தனைகளை உருவாக்கவும் செயல் திறன் மிக்க மாணவ னாக மாற்றவும் உதவி செய்கிறது, மாணவர்கள் வரைந்து உள்ள அனைத்து ஓவியங் களும் இயற்கை மீதான ஆர்வமும் இயற்கையின் பாதிப்பு எதிர்கால சமுதாயத்தை பாதிக்கக்கூடியதை தத்ரூபமாக வெளிப்படுத்தி உள்ளனர் எனக் குறிப்பிட்டார், ஜி ஆர் ஜி பள்ளி ஆசிரியர் தீபா இது போன்ற இயற்கை சார்ந்த நிகழ்வுகள் மாணவர் களுக்கு அதிகம் நடத்தப்படுவதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைக்க, குறைய வாய்ப்பு உள்ளது என்றார். பொ க்கபுரம், உண்டு உறைவிட அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமார் பழங்குடியின மக்கள் இயற்கை யாகவே ஓவியங்கள் வரைவதில் திறமைசாலிகளாக உள்ளனர் .அடித்தள மக்களுக்கு இது போன்ற சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் போது அவர்கள் தங்களின் திறமைகள் வெளிப்படுத்த மிகச் சிறந்த நிகழ்வாக இது உள்ளது என்றார். அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி மாணவிகள் அம்முல் யா ஸ்ரீ நான்காம் வகுப்பு மாணவி முதலிடமும் எஸ் அக்க்ஷத் நான்காம் வகுப்பு இரண்டாம் இடமும் எம் சுமதி நான்காம் வகுப்பு மூன்றாம் இடமும் பெற்றனர். ஜி ஆர் ஜி பள்ளி மாணவி கே.கலைவாணி நான்காம் வகுப்பு முதல் இடமும் ஸ்லீப்பனா யாசின் இரண்டாம் இடமும் சின்ஜனா மூன்றாம் இடமும் பிடித்தனர். மசினகுடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர் மணியம்மா ஸ்ரீ , பி திலகேஷனா, ஜி சஸ்மிதா, ஆர் கீர்த்தனா இவர்கள் முதலிடம் பிடித்தனர். தேர்ந் தெடுக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது, நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாட்டினை தேசிய பசுமை படை ஒருங்கி ணைப்பாளர் வே சிவதாஸ் செய்திருந்தார், மற்றும் நடைபெற்ற இந்நி கழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஓவிய போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கும் நீலகிரி தேசிய பசுமை படை ஒருங்கிணைப் பாளர் சிவதாஸ் அவர்கள் அனைவருக்கும் கூறினார்,.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0