மத்திய அரசின் வரைவு அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் எல்.பி.எஃப். சங்கம் சார்பாக மனு

கோவையில் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுகள் துறை அமைச்சர்
வி. செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த எல்.பி.எஃப். சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் வி.பி.வினோத்குமார்மத்திய அரசால் வரைவு அரசாணையாக வெளியிடப் பட்டுள்ள பல் உயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், உணர் திறன் மண்டலத்தால் வால்பாறை பகுதிக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் வால் பாறை பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அதை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தகோரி எல்.பி.எஃப்.தொழிற் சங்கத்தின் சார்பாக மனு அளித்தார் அப்போது வால்பாறை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர்
பி.ஆர். அருள்மொழி , கோவை தெற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப் பாளர் கே.பி.எஸ்.சத்திய மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.