நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் குடியரசு
தினவிழாவ முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .என்.எஸ்.நிஷா இ.கா.ப., அவர்களின் முன்னிலையில், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு, வண்ண பலூன்களை யும், சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்களையும் பறக்க விட்டார்கள்,
பின்னர், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, தன்னலமற்ற சேவை,
கடமை, நேர்மை மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றியமைக்காக 15 காவலர்களுக்கு
முதலமைச்சரின் காவலர் பதக்கத்தினையும், காவல்துறையின் சார்பில் 20 நபர்களுக்கும், வருவாய்த்துறை சார்பில் 26 நபர்களுக்கும், பேரூராட்சிகள் துறை சார்பில் 10 நபர்களுக்கும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 7 நபர்க ளுக்கும், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 6 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் தலா 5 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தமிழ்நாடு வனத்துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நியாய விலை கடை விற்பனையாளர்கள், சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்துறை, குன்னூர் நகராட்சி சார்பில் தலா 4 நபர்களுக்கும்,
மாநில நெடுஞ்சாலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தலா 3 நபர்களுக்கும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை, மாவட்ட கருவூலக் கணக்குத்துறை, மாவட்ட பொது நூலகத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, மாவட்ட நில அளவைப் பதிவேடுகள் துறை, பொதுப்பணித்துறை (மின்சாரம்), வேளாண்மை பொறியியல் துறை, போக்குவரத்துத்துறை, உதகை, நெல்லியாளம் மற்றும் கூடலூர் நகராட்சி, நீலகிரி பத்திரிக்கையாளர் மற்றும் உதகை பத்திரிக்கையாளர் சங்கம், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் எனதலா 2 நபர்களுக்கும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், பொதுப்பணித்துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறையின் பணியாளர்கள் தலா 1 நபருக்கு என மொத்தம் 159 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, கௌரவித்தார்,அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 பயனாளி களுக்கு வங்கி கடன் இணைப்பு ரூ.23 இலட்சம் பெறுவதற்கான ஆணையினையும், முன்னோடி முன்னோடி வங்கி சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5.74 இலட்சம் மதிப்பில் கல்வி கடனுதவிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பில் நுண் தொழிற்கடனுதவிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் வைப்புத்தொகைக்கான பத்திரங்களையும், மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின்கீழ், ரூ.72,000/- மும், தோட்டக்கலைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.18,346/- மதிப்பில் நுண்ணீர் பாசன கருவியும், 1 பயனாளிக்கு பசுமைக் குடில் அமைக்க ரூ.9.35 இலட்சம் நிதியுதவியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 4 பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ்களும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் 3 பயனாளி களுக்கு ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3,43,200/- மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும், 2 பயனாளிகளுக்கு ரூ.26,900/- மதிப்பில் திறன்பேசிகளையும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.60.02 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார், பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உதகை சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலூர் கோக்கால் திருமதி நீஜி சரஸ்வதி குழுவினரின் கோத்தர் சமூகத்தின் பழங்குடியினரின் கலாச்சார நடனம், புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உதகை தமிழ கமந்து திருமதி.ரூபாவதி குழுவினரின் தோடர் இன பழங்குடியினரின் கலாச்சார நடனம், தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வுட்சைட் பள்ளி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை சிலம்ப கலைக்கூடம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகளையும், தீயணைப்பு மீட்பு
மற்றும் மீட்புப் பணிகள்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியினையும் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., மாவட்ட வன அலுவலர் (உதகை கௌதம் இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி.சங்கீதா இ.ஆ.ப., உதகை அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) சதீஷ்குமார், கண்ணன் (கணக்கு), தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் .ஷிபிலாமேரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, முதன்மை கல்வி அலுவலர்
(பொ) நந்தகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த் கல்கி, உதவி
இயக்குநர்கள் முகமது ரிஸ்வான் (பேரூராட்சிகள்), சரவணகுமார் (ஊராடசிகள்),
உதகை நகராட்சித்தலைவர் வாணீஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள சதீஸ்குமார் (உதகை), செந்தில்குமார் (கூடலூர்), நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன்,வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0