வால்பாறை – ஈட்டியார் எஸ்டேட்டில் ரேசன் கடையை உடைத்த காட்டுயானை தாக்கி மூதாட்டி காயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள ஜெயஸ்ரீ தனியார் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈட்டியார் எஸ்டேட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர். குடியிருப்பில் 5வது வீட்டில் பெரியசாமி என்பவரின் மனைவி அன்னலட்சுமி வயது (67) என்பவர் குடியிருந்து வருகிறார் நேற்று 26.01.2025 ஆம் தேதி சுமார் இரவு 8.50 மணியளவில் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை குடியிருப்பின் கடைசியில் உள்ள ரேஷன் கடை கதவை உடைத்துள்ளது. அப்போது சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே வந்த மூதாட்டியை அந்த காட்டுயானை இழுத்து கீழே தள்ளி காலால் தாக்கியுள்ளது இச்சம் பவம் அறிந்த அப்பகுதி பொதுமக்களின் ஒன்று கூடி சத்தம் போட்டு யானையை விரட்டியதைத் தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றுள்ளது இச்சம்பவத்தில் சம்ப வத்தில் இடது காலில் தோல் கிழிந்த நிலையில் ரத்த காயம் ஏற்பட்டமூதாட்டியை உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளனர். இச்சம்பவம் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில் முதலுதவி சிகிச்சைக்காக வனத்துறை சார்பில் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.