திண்டுக்கல் மாவட்டம்; வக்கம்பட்டியில் பரபரப்பு, தேவாலயம் முன்பு உள்ள இடப்பிரச்சனை. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சர்வே பணிகள்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட வக்கம்பட்டியில் இரு வேறு பிரிவை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு பிரிவினருக்கு சொந்தமான புனித மரிய மதலேனாள் தேவாலயம் உள்ளது. இந்த தேவாரம் முன்பு மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் கடந்த பல ஆண்டு களாக அந்தப் பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவிற்கு செல்லுதல் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டிற்கு சென்று வந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில், இந்த தேவாலயம் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாக கூறியும், தேவாலயம் முன்பு சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் கூறி, சிவசேனா மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர், மதுரை உயர் மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால், மற்றொரு பிரிவினர் புனித மரிய மதலேனாள் ஆலயம் முன்பு, உள்ள இடங்கள் தேவாலயத்திற்கு சொந்த மான பட்டா இடங்கள் எனக்கூறி, சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், மதுரை உயர் மன்ற கிளை உத்தரவின் பேரில், ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன் தலைமையில், பிரச்சினைகுறிய இடங்களை இன்று சர்வே செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பினர் சுமார் நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியதால், பதட்டம், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் ஏ.டி.. எஸ்.பி., தெய்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.