கோவை மத்திய சிறையில் கண்ணாடி கதவில் மோதி கைதி தற்கொலை முயற்சி.

கோவை மத்திய சிறையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். அவர்களில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக சிறை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொட ர்ந்து அதிகாரிகள் கைதிகளின் அறையில் சோதனை செய்தனர் .அதில் ராஜன் என்ற கைதியிடமிருந்து 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அதிகாரிகள் ராஜனிடம் விசாரணை நடத்தினர் .அதில் அவர் ஆயுள் தண்டனை கைதி செந்தில் தான் கொடுத்ததாக கூறினார். இதை யடுத்து செந்திலிடம் விசாரணை நடத்தப்பட்டது .அதில் அவர் சிறை வளாகத்தில் வேலை செய்து வருவதும், அப்போது சிலர் வெளியே இருந்து வரும்போது அவரிடம் கஞ்சாவை கொடுப்பதும், அதை அவர் ஆசன வாயிலில் வைத்து சிறைக்குள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இருந்த போதிலும் அவர் தான் கஞ்சா கடத்தவில்லை என்று சிறைத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் திடீரென்று சிறைத்துறை அதிகாரிகள் விசாரண நடத்தி அறையில் இருந்த கண்ணாடி கதவில் வேகமாக தலையை மோதிக்கொண்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது .உடனே அவரை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.