கருமத்தம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையம். விரைவில் திறப்பு.

கோவை மாவட்டத்தில் 13 தீயணைப்பு நிலையங்கள் உள்ளது. தற்போது கூடுதலாக கருமத்தம்பட்டியில் புதிய தீயணைப்பு நிலையம் ஓரிரு நாட்களில் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர உள்ளது.இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் புளுகாண்டி கூறியதாவது: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அதிகளவில் தொழிற்சாலைகள், கிராமங்கள் உள்ளது. எனவே அங்கு புதிய தீயணைப்பு நிலையம் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து அரசு எங்களது கோரிக்கையை ஏற்று கொண்டு புதிய தீயணைப்பு நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து கருமத்தம்பட்டியில் வாடகைக்கு இடம் தேர்வு செய்யப் பட்டு அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலைய அலுவலர் தலைமையில் 16 வீரர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். ஒரு தீயணைப்பு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டியில் ஏதாவதுஅசம்பாவிதம் ஏற்பட்டால் சூலூர் மற்றும் அன்னூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள்அனுப்பப்பட்டு வந்தது. தற்போது கருமத்தம்பட்டியில் தீயணைப்பு .நிலையம் அமைந்துள்ளதால் தீயணைப்பு வாகனங் கள் சம்பவ இடங்களுக்கு உடனே செல்ல முடியும். இதன் மூலம் கருமத்தம்பட்டி, சோமனூர், வாகராயம்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள 100 கிராமங்களுக்கும், அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு நிலையத்தில் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்