நீலகிரி குடியரசு தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்து துறைகளுடன் மாவட் ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற இருக்கும் குடியரசு தின விழா 26-01-2025 முன்னிட்டு,
மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு
பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் (20-01-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது – நீலகிரி மாவட்ட உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 26.01.2025 அன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது, மேலும், குடியரசு தின விழா நடைபெறவுள்ள விளையாட்டு மைதானத்தில் காவல்துறையினரின் அணி வகுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பொதுப்பணித்துறையின் சார்பில் மேடை அலங்காரப் பணிகள் மேற்கொள்ளவும், தீயணைப்பு துறையினர் மைதானத்தில் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனத்தை நிறுத்தவும், தோட்டக்கலைத்துறையின் மூலம் விழா மேடையில் பூந்தொட்டிகள் வைத்தும், அலங்காரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்,மேலும், நகராட்சித்துறையின் சார்பில் விழா நடைபெறும் இடத்தை சுத்தம் செய்து, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 108 அவசர கால வாகனம் விழா நடைபெறும் இடத்தில் நிறுத்தவும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பழங்குடியினர். நடன நிகழ்ச்சிகள் நடத்திட உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பல தீர்மானங்கள் ஆலோசிக்கப்பட்டது, நடைபெறவுள்ள குடியரசு தினவிழா நிகழ்ச்சியினை மிகச் சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மிக சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்திரராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஷ்குமார், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் கல்பனா, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ்,
வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள்
பலர் கலந்து கொண்டனர்,.