கோவையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்..!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் சூலூர் பொங்கல் விழா குழு தலைவரும் அரிமா சங்கங்களின் அறக்கட்டளை தலைவரும் விவசாய சங்கத்தின் தலைவரும் சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் த. மன்னவன் 61 வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் பூக்கடை ரவி ஏற்பாட்டில் 61 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட மன்னவன் கூறுகையில் என் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கின்ற அத்தனை சகோதர, சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் . இந்நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், முன்னாள் கவுன்சிலர் சூ.வே. தர்மராஜ், அரிமா பழ. சிவகுமார் மேனேஜர் லோகநாதன், எஸ்.டி. சந்துரு, மக்கள் வெளிச்சம் சேகர், மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர் பூக்கடை ரவி நன்றி தெரிவித்தார்.