கோவை துடியலூர் அருகே உள்ள மகாலட்சுமிபுரம், எஸ். எம் .நகரை சேர்ந்தவர் அருள். டிரைவர் இவரது மனைவி கலைத்தாய் (வயது 33) இவர்களுக்கு குழந்தை இல்லை. கலைத்தாய் அங்குள்ள அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரரான உருமாண்டம் பாளையம், எப்.சி.ஐ. நகரை சேர்ந்த இன்ஜினியர் அரிச்சந்திரன் (வயது 43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு ஆண்டாக கலைத் தாயும், அரிச்சந்திரனும் நெருங்கி பழகி வந்தனர். அவ்வப்போது அரிச்சந்திரனிடம் இருந்து கலைத் தாய் ரூ.2 லட்சம் பணம் வாங்கி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிச்சந்திரனிடம் கலைத்தாய் ரூ. 2 லட்சம் கடனாக பெற்றார். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த பணத்தை அரிச்சந்திரன் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்காததுடன் திடீரென்று வேலையை விட்டும் நின்றுவிட்டார் .இதை யடுத்து அவர் கலைத்தாயின் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். அவர் போன் எடுக்கவில்லை. அப்போது தான் கலைத்தாய்க்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதும்,அதனால் தன்னிடம் பேசாததும் அரிச்சந்திரனுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அரிச்சந்திரன் கலை தாயை கொலை செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து தனது உறவினரான உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை அடுத்த தீத்துவாசல் பட்டியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 30) என்பவரிடம் கூறி உதவி கேட்டார். பின்னர் 2 பேரும் சேர்ந்து கலைத்தாயை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலைத் தாயின் மாமனார் இறந்துவிட்டார். இதையடுத்து கலைத்தாய் தனது கணவருடன் அரியலூர்,|செந்துறை அருகே உள்ள கிராமத்திற்கு சென்றார். இந்த நிலையில் கலைத்தாய் மட்டும் கடந்த 13 – ந் தேதி கோவை துடியலூருக்கு வந்தார். இந்த நிலையில் கலைத்தாய் தனியாக இருப்பதை அறிந்த ரவிச்சந்திரன் தனது உறவினர் பிரசாந்துடன் அங்கு சென்றார். அங்கு அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால் ஆத்திரமடைந்த அரிச்சந்திரன் தனது உறவினருடன் சேர்ந்து அரிவாளால் கலைத்தாயை சரமாரியாக வெட்டினார் .இதில் அவருக்கு கழுத்து தலைமுகம் மார்பு உட்பட 15 இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த கலைத்தாய் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். இதை தொடர்ந்து 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள். இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் மற்றும் துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரிச்சந்திரன், பிரசாத் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0