நீலகிரி மாவட்டம், உதகையை முள்ளிக்கொரை பகுதியில் இயங்கிவரும் அன்பு
இல்லத்தில், நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக்குழுவின் சார்பில்
நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, தூய்மை பணியாளர்கள் மற்றும் அன்பு அறக்கட்டளை முதியோர்களுக்கு வேட்டி,
சேலைகளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் கூறினார் , நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ், உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, பகுதி நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர்,
மதநல்லிணக்க அமைதி குழு தலைவர் B. K.கிருஷ்ணன், செயலாளர் K. முகமதுஅலி, A.J. மெக்கின்ஸ் பொருளாளர், அறக்கட்டளை நிர்வாகி ஆனந்தி பிரிட்டோ விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது : உழவர்களுக்காக கொண்டாடப்படும் இந்த பொங்கல் திருநாளை நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக இணைந்து நமது மாவட்டத்தில் கொண்டாடி வருகிறோம். இந்த அன்பு அறிவு ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள தங்கியுள்ள முதியோர்களுக்கு எப்போதும் மாவட்ட நிர்வாகமும், உதகை நகராட்சியும் உறுதுணையாக இருக்கும் என்பதை இந்நள்ளாளில் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார், முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அன்பு அறிவு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கும், உதகை நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கும் வேட்டி, சேலைகளை வழங்கினார், மற்றும் நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளிக் குழந்தைகள் ஓ பார்ட்ஸ் பள்ளி, இந்தி பிரச்சார சபா பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து, அன்பு அறிவு ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் முதியோர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன, மற்றும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகளை உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், பகுதி நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர், B. K. கிருஷ்ணன், பொருளாளர் மெக்கன்ஸ், இல்லம் நிர்வாகி ஆனந்தி பிரிட்டோ ஆகியோர் வழங்கினர்,
இந்நிகழ்வின்போது, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் குமார், உதகை
நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபு, உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ்,
நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைத்திக்குழு தலைவர் கிருஷ்ணன்,
செயலாளர் முகமதுஅலி, பொருளாளர் மெக்கன்சி, அன்பு அறிவு அறக்கட்டணை
நிர்வாகி ஆனந்தி பிரிட்டோ, உதகை நகரமன்ற உறுப்பினர் (27வது வார்டு)
ஜெயலட்சுமி சுதாகர், அமைதிக்குழு நிர்வாகிகள் கவிதாயினி, சி அமுதவல்லி, ஜி சுரேஷ் ராமன், பகுதி மக்கள், அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0