கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் உணர் திறன் மசோதாவை ரத்து செய்ய வேண்டி வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும் வால்பாறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வால்பாறை நகர கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வால்பாறை நகர கழக செயலாளர் எஸ்.கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி திமுக மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் ராஜ், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் கணபதி செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் நல்லாம்பள்ளி நாச்சிமுத்து, மாநில மாணவரணி துணைச் செயலாளர் இள.கோபால கிருஷ்ணன், உயர்நிலைக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பியுமான டாக்டர் கிருஷ்ணன் கோவை புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.பெருமாள் மற்றும் இந்திய கூட்டணி நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி தொழிற்சங்க தலைவர்கள், வியாபாரிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0