கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 55) இவர் கடந்த 2014 ஆம் ஆண்டுஅதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது போக்சோ வழக்கு என்பதால் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப் பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுப்பிரமணியனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு வழங்கினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0