தந்தை பெரியார் குறித்து அவதூறு பேச்சு. சீமான் மீது 8 காவல் நிலையங்களில் வழக்கு பதிவு.

கோவை; தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான், தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். பொதுக்கூட்டம், சமூக வலைதளத்திலும் இந்த பேச்சு தொடர்ந்து வருகிறது. இது திட்டமிட்டு சமூக சீர்குலைவை ஏற்படுத்த வகையிலும் பெரியாரைக் களங்கப்படுத்தும் வகையிலும் உள்ளது. ஏற்கனவே கடந்த 20 23 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புகார் மனு கொடுத்து இருக்கிறோம் .அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்று திராவிட கழகம் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் பெரியார் குறித்து சீமான் தெரிவித்த அவதூறான கருத்து அவருடைய கட்சிக்கு சொந்த மான யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது தவற திராவிட விடுதலைக் கழகத்தினர், விடுதலை சிறுத்தை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதை கழகம் உட்பட மொத்தம் 7 அமைப்பினர் போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை சந்தித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் தடாகம் பெரியநாயக்கன்பாளையம் பொள்ளாச்சி கிழக்கு ஆனைமலை மகாலிங்கபுரம் மேட்டுப்பாளையம்,கோவை மாநகரத்தில் சுந்தரா புரம் போத்தனூர் ஆகிய காவல் நிலையங்களில்சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 192,353 (2)ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.