வால்பாறையில் காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கோவை மாவட்டம் வால்பாறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி வால்பாறை காவல்துறையினர் சார்பாக காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சிவன்ராஜ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இப்பேரணியில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தலைக்கவசம் உயிர் கவசம், வாகனத்தில் அலைபேசி விபத்தாகும் நீ யோசி, போதையில் பயணம் பாதையில் மரணம், வேகம் சோகத்தை தரும் நிதானம் நிம்மதியை தரும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொருந்திய பதாகைகளை கையிலேந்தி அவற்றை முழங்கியவாறு வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி முக்கிய நகர்பகுதி வீதிவழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் காவல் துறையினருடன் மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.