600 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள வண்ணான் கோவில்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா மேலும் 6 பெட்டிகளில் இருந்த 600 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை அவர் ஜோதிபுரம், பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்த ரகுபதி மகன் சக்திகுமார் ( வயது 30) என்பது தெரியவந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.