கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் இவரது மனைவி வசந்தா ( வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் 1 -30 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 20ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து வசந்தா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை டி. நகர், துக்காராம் 2 -வது வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் ( வயது 25) என்பவரை இன்று கைது செய்தனர்..இவர் தற்போது கோவை கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகரில் வசித்து வருகிறார், இவரிடம் இருந்து நகை -பணம் மீட்க்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0