கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் சோதனை சாவடி அருகே செல்போன் கடை நடத்தி வருபவரிடம் பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இதேபோல சிங்காநல்லூர் அருகே குளத்தேரி பகுதியில் நடந்து சென்ற பெண்களிடம் தங்க நகை, , மற்றும் சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகே நின்ற ஒருவரிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் கணவருடன் மோட்டார் சைக்கிள் சென்ற பெண்ணிடம் தங்க நகை வழிப்பறி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த 4கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த தீபக் அமர்நாத் (வயது 26) கோபிநாத் ( வயது 19) பரமக்குடி ஆல்வின் பில்கேட்ஸ் (வயது 21) தேனி மாவட்டம் விக்னேஸ்வரன் ( வயது 20) என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் 4பேரும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி பரிந்துரை செய்தார். அதன்பேரில் அந்த 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் உத்தரவிட்டார். இதை யடுத்து 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டனர். அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 4 பேருக்கும் வழங்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0