உதகை; தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, போட்டி களில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்,தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களின் ஆணையின் படி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர் களின் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது,அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில், 2024-2025ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நடைபெற்றது. இப்போட்டிகளில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்கள் -8 கி.மீ, பெண்கள் -5 கி.மீ மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்கள் -10 கி.மீ, பெண்கள்-5 கி.மீ என மொத்தம் 04 பிரிவுகளில் நடத்தப்பட்டது, இம்மாரத்தான் போட்டிகளில் 160-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு, உதகை HADP திறந்த வெளி விளையாட்டரங்கத் திலிருந்து தொடங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், ஹில்பங்க் வழியாக, உதகை
தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகை சென்றடைந்து, மீண்டும் HADP திறந்த
வெளி விளையாட்டரங்கம் வந்து நிறைவுபெற்றது,முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சேர்த்து 04 பிரிவுகளில் முதல் பத்து இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு என மொத்தம் 40 நபர்களுக்கு, இதில் முதல் பரிசு காசோலை தொகையாக 04 நபருக்கு தலா ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசு காசோலை தொகையாக
04 நபருக்கு தலா ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசு காசோலை தொகையாக 04 நபருக்கு தலா ரூ.2,000/-மும், மற்றும் 04 முதல் 10 இடங்களில் வெற்றி பெற்ற 28 நபருக்கு தலா ரூ.1,000/-க்கான காசோலை தொகையினை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார், இந்த நிகழ்வுக ளின் போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) இந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்,
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0