கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக பணி செய்து ஓய்வு பெற்றவர் ராமசாமி வயது 66 இவர் நேற்று காலை தனது மனைவி விஜயகுமாரியிடம் வீட்டில் குளிப்பதற்காக வெந்நீர் காயவைக்க சொல்லி விட்டு வீட்டுருகே பல் துலக்கியவாறு சென்றவர். வெகுநேரமாகியும் வராததால் அப்பகுதி க்கு சென்று தேடிப்பார்த்தபோது அருகே உள்ள குளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்து ள்ளார் உடனே சம்பந்தப்பட்ட முடீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவப் பகுதிக்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0