கோவை கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி இன்று அதிகாலையில் கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கிசெல்வதற்கு திரும்பியது. அப்போ று லாரியிலிருந்த கேஸ்நிரம்பியுள்ள டேங்கர் மட்டும் கழன்று தனியாக விழுந்துள்ளது. அதில் சேதம் ஏற்பட்டு கேஸ் வெளியேறி யது. உடனடியாக லாரியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித் தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து வாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். மேம்பாலத் தில் போக்குவரத்தை தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டு ள்ளனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் காந்தி குமார், போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்,மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபணிகளை துரிதப்படுத்தினர்.அந்த சிலிண்டர் மேல் தீயணைப்பு படை யினர் தொடர்ச்சியாக தண்ணீர் பீச்சி அடித்து வருகிறார்கள்.இந்தப் பணிகள் முடிவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேஸ் முழுவதும் வெளியேற்ற பட்டாலோ அல்லது கேஸ் முழுவதும் தண்ணீரில் கலக்கப்பட்டாலோ தான் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு கேஸ் நிறுவன பொறியாளர்கள் என பலரும் வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதிகாலை நடந்த இந்த விபத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் கிரேன் போன்ற வாகனங் களும் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார். அந்தப் பகுதியில் பரபரப்பான சூழலை நிலவுகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0