கோவை; 2024 ஆம் ஆண்டு முடிந்து நள்ளிரவு புத்தாண்டு 2025 பிறந்தது. இதையொட்டி கோவையில் நள்ளிரவு முதல் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அவினாசி ரோடு, திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து கோஷங்களை பரிமாறியபடி சென்றனர். புத்தாண்டு பிறந்ததும் நகரின் பல பகுதிகளில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண் டாடினர். ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க்” மீடியா டவர் ” பகுதியில் திரளானவர்கள் கூடி நின்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.குடிபோதையில் வாகன ஓட்டுபவர் களை பிடித்து தங்க வைப்பதற்கு 6இடங்களில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களை தங்க வைத்து போதை தெளியும் வரை அவர்களுக்கு அறிவுரை வழங்கப் பட்டது. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை முறுக்கிக் கொண்டு மின்னல் வைத்து சென்றனர். கோவை ராமநாதபுரம் சுங்கம்,ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு ஜெபத்துக்கு ஆலயத்துக்கு செல் பவர்கள் பாதிக்கப்பட்டனர். வாகனங்களில் இருந்து விழுந்து 10 க்கு மேற்பட்ட இளைஞர் கள் படு காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். கோவில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஆங்கில புத்தாண்டை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பெரிய கடை வீதியில் உள்ள மைக்கேல் ஆலயம், சி.எஸ்.ஐ .ஆலயம் புலியகுளம் அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் அதிகாலை 3 மணி வரை நீடித்தது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0