சிங்காநல்லூர் போக்குவரத்து பெண் போலீஸ் எஸ்.ஐ. யின் வசூல் வேட்டை.

கோவை சிங்காநல்லூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பெண் போலீஸ்சப் இன்ஸ் பெக்டராக ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதல் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளாராம். அதிகாலையில் உழவர் சந்தைக்குஇருசக்கர வாகனத் தில் வரும் வியாபாரிகள்,கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள்ஆகியோரை குறி வைத்து வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் ஒரு வழி பாதையில் அரசு பேருந்து ஒன்று வந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த இந்த பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இதைக் கண்டு கொள்ளவில்லை.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலை யில் அரசு பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு பஸ் என்பதால் கண்டு கொள்ளாமல் இருந்தாராம். நேற்று கோவையில் கல்லூரியில் படிக்கும் 19-வயது மாணவர் ஒருவர் குடும்ப கஷ்டம் காரணமாக ஒரு பத்திரிகைஅலுவலகத்தில் மாலை நேரங்களில் பேப்பர் போடும் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.சிங்காநல்லூரில் நேற்று மாலையில் பணியில் இருந்த அந்தப் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த ஏழை மாணவரிடம் மாமுல் கேட்டாராம். கொடுக்க மறுத்ததால்,அவரை குறித்த நேரத்தில்அரசு அலுவலகங்ளுக்கு சென்று பேப்பர் போட விடாமல் தடுத்து,தகாத வார்த்தைகளால் பேசி,மன உளைச்சல் ஏற்படுத்தி ரூ. 1000 அபராதம் விதித்துள்ளார். இவர் லஞ்ச பணம் வசூல் செய்வதற்கு தனியாக ஒருவரை நியமித்து உள்ளாராம்.அவரிடம் தள்ளுவண்டி கடைகள்,பிளாட்பாரத்தில் கடை நடத்து பவர்கள்,போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சிக்கியவர்கள் தினமும் பணம் கொடுக்க வேண்டுமாம்..பணம் கொடுக்கவில்லை என்றால் உடனடியாக அபராதம் விதிப்பாராம். கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர்,உதவி ஆணையர், ஆய்வாளர் போன்றோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.இதனால் கோவையில் இந்த ஆண்டு விபத்து பலி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.அவர்களது பெயருக்குகளங்கம் ஏற்படும் வகையில் இப்படி ஒரு சில அதிகாரிகள் நடந்து கொள்வதால் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.இந்தபோக்குவரத்து பெண் எஸ்.ஐ. மீது துணை ஆணையர், உதவி ஆணையர்,ஆய்வாளர் ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பொறுப்பு ஏற்க உள்ள காவல் ஆணையர் அவர்களும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்என்று இவரால் பாதிக்கப்பட்டஅனைத்து தரப்பு மக்களும்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.