நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜக்கனாரை, குஞ்சப்பனை, கொணவக்கரை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2-18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட
ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். mமுதலாவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஜக்கனாரை ஊராட்சி, பனகுடி பகுதியில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின்கீழ் தலா ரூ.72,000/- வீதம் மொத்தம் ரூ.10.80 இலட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட்டு வரும் 15 வீடுகளின் புணரமைப்பு பணிகளையும், கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின்கீழ் மூன்ரோடு பகுதியில் தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் உதகை – தும்பூர் சாலை வரை ரூ.37.95 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளையும், குஞ்சப்பணை ஊராட்சி,
அறையூர்மட்டம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணியினையும், காக்காகுண்டு பழங்குடியின
கிராமத்தில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் தலா ரூ.5.73 இலட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டு வரும் 3 வீடுகளின் கட்டுமான பணிகளையும், கொணவக்கரை ஊராட்சி,
தலமுக்கை பகுதியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் தலா ரூ.5.73 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகளின் கட்டுமான பணிகளையும், கொணவக்கரை ஊராட்சி, தலமுக்கை பகுதியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் தலா ரூ.5.73 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 20 வீடுகளின் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணியினையும் என மொத்தம் ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, குறித்த நேரத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார் மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கெங்கரை ஊராட்சி அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு பராமரிக் கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குஞ்சப்பணை ஊராட்சி, காக்காகுண்டு பழங்குடியின பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள பழங்குடியினர்களிடம் கலந்துரையாடி, அவர்களிடம் பழங்குடியினர் சான்றிதழ்கள், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கிய அத்தியாவசிய சான்றிதழ்கள் உள்ளனவா எனவும், அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனை வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், கெங்கரை ஊராட்சி மன்றத் தலைவர் முருகன், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணியன், விஜயா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,.

What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0