சிறந்த சமூக சேவைக்காக எஸ்.பி. அன்பரசன் -ஸ்ரீதேவி சிவாவுக்கு விருது

கோவை ரோட்டரி ஜெனித் சங்கத்தில் இந்த ஆண்டுக்கான சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கும் விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் சமூகத்திற்கு சிறந்த சேவை செய்து வரும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ். பி. அன்பரசன், ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி சிவா என்ற சிவகனேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. விருதுகளை ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுந்தர வடிவேலு வழங்கினார். நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் வசந்த் சண்முகம் நிர்வாகிகள் மதனகோபால், கோகுல்ராஜ், சாமுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.