சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து. கோவையில் நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதுபோல கோவை வடக்கு மாவட்டம் முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் என்பவரும் அரசூர் ஊத்துப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று மாலையில் தனக்கு தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். அப்போது அவரது அருகில் இருந்த தொண்டர் கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0