கோவை சுந்தராபுரம் ,குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 -ல் வசிப்பவர் ராஜலட்சுமி ( வயது 30) ம இவருக்கும் காஞ்சிபுரம்,பழைய ரயில் நிலையம் ரோடு அருட்பெருஞ்ஜோதி நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (வயது 39) என்பவருக்கும் 19-2-2018அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மனைவியின் பெற்றோர் 104 பவுன் தங்க நகைகளும் 3 கிலோ வெள்ளிப் பொருட்களும் வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நகைகளை கணவர் வெங்கடசுப்பிரமணியன் அவரது தாயார் கோமதி ( வயது 61) அண்ணன் ராம் குமார் ( வயது 45 )அக்கா சாந்தி ( வயது 41)வியாபாரம் தொடங்குவதற்காக வாங்கிமோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கணவர் வெங்கட சுப்பிரமணியம், மனைவி ராஜலட்சுமிக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜலட்சுமி சுந்தரபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் பானுமதி விசாரணை நடத்தி கணவர் வெங்கடசுப்பிரமணியன் ,தாயார் கோமதி, அண்ணன் ராம்குமார், அக்கா சாந்தி ஆகியோர் மீது கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை நம்பிக்கை மோசடி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0