கோவையில் பஸ் – லாரி மோதல் 16 பேர் படுகாயம்.

கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் மாசாணி யப்பன் ( 36) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் ஒத்தக்கால் மண்டபத்தை அடுத்த மயிலேறி பாளையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிப்பர் லாரி ஒன்று திடீரென்று சிக்னல் போடாமல் வலது பக்கம் திரும்ப முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. எதிர் பஸ்சில் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. பஸ்சில் பயணம் செய்த கிணத்துக்கடவு ரமேஷ் ( 52 ) உடுமலை ஆசாத் ( 20 ) முகமது கயில் ( 13 ) ஆனைமலை பிரவீன் ( 23 ) கோவை விஜயலட்சுமி ( 40 ) ராஜேஸ்வரி (16) தீபா ( 26)பர்னிகா (49) பழனியம்மாள் ( 46 ) ரேஹானா பேகம் (37) வேலாந்தவளம் ரோடு பரிமளா ( 19) ராதா ( 45 )பொள்ளாச்சி பாப்பாத்தி (47) மதுக்கரை ரேவதி ( 41 ) உடுமலை கோவிந்தராஜ் ( 44 ) பொள்ளாச்சி சண்முகம் (63 )ஆகிய 16 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.