நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமை யில் நடைபெற்றது, மேலும், விவசாய சங்கங்களிட மிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 38 கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அந்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பதில்களாக விவசாயிகளுக்கு தெரிவிக் கப்பட்டு, ஆன்லைனில் குபேட்டா இயந்திர பயன்பாட்டிற்கான அனுமதி கோருவது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :- நீலகிரி மாவட்டத்தில், மானியத்தில் சோலார் மின் வேலி அமைப்பதில் உள்ள இடர்பாடுகளை களைக்கவும், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் மாவட்டத்தில் நாட்டு மாடுகள் வளர்க்க மானியம் வழங்குவது தொடர்பான கருத்துரு அனுப்ப வேண்டும் எனவும், மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், வனவிலங்கு களால் ஏற்படும் பயிர்சேதத்திற்கு இழப்பீடு பெற விவசாயிகள் நேரடியாக வனத்துறையை அணுகி விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் எனவும், மக்கும் குப்பை, மக்காத குப்பை களை பொதுமக்கள் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் எனவும், இதுகுறித்து பொதுமக்களிடையே உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், வனவிலங்குகளுக்கு உணவளிக்கும் சுற்றுலா பயணிகள் மீது வனத்துறையின் மூலமாக அபராதம் விதிக்க வேண்டும் எனவும், விவசாயம் தொடர் பான கோரிக்கைகள் மீது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தயாளன், துணை இயக்குநர் ஆம்ரோஸ் பேகம், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட பல பகுதியில் இருந்து விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0