கடன் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி. தனியார் அறக்கட்டளை நிர்வாகி கைது.

கோவை; வேலூரை சேர்ந்தவர் ரூபன் ( வயது 50) இவர் கோவை அருகே உள்ள கொண்டையம் பாளையத்தில் தனியார் அறக்கட்டளை நடத்தி வந்தார். அதில்ரூபன் தலைவராகவும், சண்முகம் செயலாளராகவும், சீனிவாசன், யசோதா, டேவிட் ராஜா ஆகியோர் செயற்குழு உறுப்பிர்களாகவும் இருந்தனர். இந்த அறக்கட்டளை மூலம் வட்டியில்லாமலும், மானியத்துடன் கடன் வாங்கி கொடுக்கப்படும் என்றும் ரூ1 லட்சம் கடன் வாங்கி கொடுத்தால் ரூ.5 ஆயிரம் அறக்கட்டளைக்கு கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது இதை யடுத்து கோவை மாவட்டத்தை சேர்ந்த பலர் இந்த அறக்கட்டளை யில் கடன் கேட்டு பணம் செலுத்தினார்கள். ஆனால் ரூபன் மற்றும் நிர்வாகிகள் பணம் செலுத்தியவர்களுக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் அதில் ரூபன் உட்பட 5 பேரும் சேர்ந்து ரூ. 50 லட்சத்திற்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதை யடுத்துசெயலாளர் சண்முகத்தைகடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரூபனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தலை மறைவாக உள்ள சீனிவாசன் ,யசோதா, டேவிட் ராஜா ஆகியோரை தேடி வருகிறார்கள் இந்த தனியார் அறக்கட்டளை பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் தாராளமாக புகார் கொடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.