திருச்சி: திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைதான ‘டாட்டூ’ டிசைனர் ஹரிஹரன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன் ஜெகனின் கூட்டாளி என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(25). மேலசிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ சென்டர் நடத்தி வந்தார். இவர் மும்பையிவ் ரூ.2 லட்சம் வரை செலவு செய்து, கண்களில் பச்சை குத்தி வந்துள்ளார். முக்கியமாக, அறுவை சிகிச்சை மூலம் நாக்கையும் இரண்டாக பிளந்து கொண்டுள்ளார். இதற்கான பயிற்சியை அவர் மும்பை யில் கற்று வந்து திருவெறும்பூர் கூத்தைப்பாரை சேர்ந்த ஜெயராமனுக்கு கடந்த 9ம் தேதி ஆபரேஷன் மூலம் நாக்கை இரண்டாக பிளந்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங் களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து ஹரிஹரன், ெஜயராமன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,” திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ‘டாட்டு’ டிசைனர் ஹரிஹரன், கடந்தாண்டு நவ.22ம் தேதி போலீசாரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட திருச்சி திருவெறும்பூர் சர்க்கார்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகனுடன் (30) தொடர்பில் இருந்து வந்துள்ளார். போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்து போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஹரிஹரன் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதா? என்றும், நாக்கை ஆபரேஷன் செய்யக்கூடிய பொருட்களை எங்கு வாங்கினார், போலியாக ரசீது தயாரித்து அதற்கான உபகரணங்களை மெடிக்கலில் வாங்கினாரா என்பது குறித்தும் ஒரு பக்கம் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ‘டாட்டூ’ டிசைனர் ஹரிஹரனை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.” என்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0