தமிழக மக்கள் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வித்திறனைப் பெற தமிழக அரசின் முன் னெடுப்பில், மாநில அளவில் நூலகங்களும், அறிவுசார் மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிநவீன நூலகங்களும், அறிவுசார் மையங்களும் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூன் 27 இல் சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் காவிரிக் கரை யில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை செயல்படுத்தும் விதமாக தற்போது திருச்சியிலும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி, திருச்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனு மதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதை அடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0