கோவைக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்த 2முக்கிய குற்றவாளிகள் மும்பையில் கைது.

கோவை மாநகர பகுதியில் போதைபொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர் களை கைது செய்து வருகின்றனர். . இந்த நிலையில் கோவை மாநகர பகுதியில் உள்ளவர் களுக்கு மும்பையில் இருந்து போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்படுவதாக போலீசரு க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை கமிஷனர் சரவணக்குமார் மேற்பார் வையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .அத்துடன் அவர்கள் மும்பை க்கு சென்றும் தீவிர விசாரணைமேற்கொண்டனர். அப்போது நிகேஷ் நிவில் விகாஸ் (வயது 29) அஜய்குமார் ( வயது 28) ஆகியோர்தான் கோவையில் உள்ள வர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 340 போதை மாத்திரைகள் மற்றும் முக்கிய டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டைரியில் தமிழகத்தில் யாருக்கெல்லாம் போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்பட்டது என்ற முழு விவரம் இருந்தது .இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..