கோவை; சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கோவில் வலம் வந்து வந்து கருடாழ்வார் கோபுரத்திலும் மூலஸ்தான கோபுரத்திலும் தீபங்கள் வைக்கப்பட்டு திருக்கோயில் முன்புறம் சுமார் 30 அடி உயரமுள்ள உள்ள தீப கருட கம்பத்துக்கு அபிஷேகங்கள் நடைபெற்று சொக்கப் பாணையில் என்னை ஊற்றி மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னாள் அமைச்சரும் கோயமுத்தூர் மேயர் டாக்டர் செ.ம. வேலுச்சாமி, குலதெய்வமாக வழிபடும் தாசபளசிஈக தாசபளஞ்சீக சமூகத்தினர், புதூர் மருதாசனத்தேவர் திருத்தேர் அறக்கட்டளையினர், திருக்கோவில் மார்கழி கமிட்டியர் முன்னிலையில் நடைபெற்ற மகா ரோகிணி தீபத்தை ஏராளமான பக்தர்கள் பௌர்ணமி நிலவுடன் பார்த்து வழிபட்டனர். தொடர்ந்து ஆடல் பாடல் உடன் பஜனைநடைபெற்றது. வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0