புதுடில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை ஜப்பான் பிரதமர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ, அரசு முறை பயணமாக இன்று(மார்ச் 19) இந்தியா வர உள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை, அங்கு செல்லும் பியுமியோ கிஷிடோ அறிவிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும்போது, 300 பில்லியன் யென்(ஜப்பான் பண மதிப்பு) கடன் வழங்கும் திட்டத்தை அறிவிப்பதுடன், கார்பன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் எரிசக்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.இந்தியா பயணம் தொடர்பாக பியுமியோ கிஷிடோ கூறியதாவது: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் நிலையில், சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், பல்வேறு விஷயங்களில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் எனக் கூறினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0