வேலை பார்த்த வீட்டில் நகை திருடிய ஏ.சி. மெக்கானிக் கைது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பாபு டேனியல் இவர் கடந்த 2-ந் தேதி அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்ப்பதற்காக ஏசி மெக்கானிக்கை அழைத்து வேலை பார்த்துள்ளார். பின்பு வேலைக்குச் சென்று விட்டு அவரது மனைவி வந்து பார்த்தபோது, அவரின் “ட்ரெஸிங் டேபிள் “டிராவிலிருந்த சுமார் 4¼ சவரன் தங்க நகையை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.,போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார் இதன் பேரில். தனிப்படை அமைக்கப்பட்டு புலன்விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சசிகுமார் (30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீட்டில் திருடிய வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதன் பேரில் சசிகுமாரை கைது செய்து,மேற்படி வழக்கின் செத்துக்களான சுமார் 4¼ சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளையன் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.