கோவை காந்தி பார்க் இடையர் வீதியை சேர்ந்தவர் சுந்தர் ( வயது 42) வியாபாரி. இவர் நேற்று மருதமலை ரோட்டில்,டாஸ்மாக் கடை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இவர் கொடுக்க மறுத்தார், இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி பணம் பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போட்டார். அங்கிருந்த பொது மக்கள் ஓடி வந்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் ஆர். எஸ். புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் 3 பேரையும் கைது செய்தார். விசாரணையில் அவர்கள் சீரநாயக்கன்பாளையம் .ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( வயது 24) பி.என்.. புதூர் ஜீவா நகரை சேர்ந்த அறுபடையப் பாஎன்ற படையப்பா ( வயது 25) சீரநாயக்கன்பாளையம் ராஜேந்திர பிரசாத் வீதியை சேர்ந்த தீனதயாளன் (வயது 23 )என்பது தெரியவந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0