வட மாநில போலீஸ் அதிகாரிகள் போல நடித்து மூதாட்டியிடம் ரூ 80 லட்சம் மோசடி.

கோவை அருகே உள்ள கே .என். ஜி புதூர் ,நானா – நானி குடியிருப்பில் வசிப்பவர் எஸ். விஜயலட்சுமி (வயது 77 )இவரது செல்போனுக்கு ஒருவாட்ஸ் அப் அழைப்பு வந்தது.அதில் பேசியவர் தங்களை உத்திரபிரதேச மாநில சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர்,தங்கள் ஆதார் கார்டு, வங்கி கணக்கு,மற்றும் சான்றிதழ்களைபயன்படுத்தி ஒரு கும்பல் பணம் மோசடி செய்துள்ளது.அதற்கு நீங்கள் உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.இதனால் தங்கள் மீது வழக்கு பதிவு செய்துகைது செய்ய வேண்டும்.இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் தங்கள் வங்கி கணக்கு,ஆதார் கார்டு போன்ற விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்கவும். இல்லாவிடில்ஓரிரு நாட்களில் உங்களை கைது செய்து விடுவோம்.இவ்வாறு மிரட்டினார்கள்..அந்த நபர்கள் காவல்துறை சீருடை அணிந்து இருந்தனராம்.இதை நம்பிய விஜயலட்சுமி வங்கிக் கணக்கு ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பி வைத்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரு80 லட்சம்மோசடி செய்ய பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து விஜயலட்சுமி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.