கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில் மானாம் பள்ளி வனச்சரக பகுதியில் நான்காவது நாளான நேற்று மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஒரு நேர்கோட்டு பாதையில் இரண்டு பணியாளர்கள் வீதம் 16 நேர்கோட்டு பாதையில் சுமார் 32 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
