நீலகிரி மாவட்டம் உதகையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 138 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்

நீலகிரி மாவட்ட உதகை ஆட்சியர் அலுவலகத்தில்,நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்
கூட்டத்தில்,ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிட மிருந்து 138 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களி டமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளி களுக்கு உரிய நேரத்தில் சென்று சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், பொது மக்கள் அடிப்படை வசதிகள் கோரி வழங்கும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவ லர்கள் முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சி த்தலைவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார், இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் நீலகிரி மாவட்டம் உதகை எம்.பாலாடாவில் செயல்படும் ஏகலைவா அரசு மாதிரி உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதிக்கு தொலைக்காட்சி பெட்டி வாங்கு வதற்க்கு மாவட்ட ஆட்சிரியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.40,000/-க்கான காசோலை யினை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். (சமூக பாதுகாப்புத் திட்டம்) இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யின நல அலுவலர் சுரேஷ் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிசந்திரன் உட்பட
அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.