மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பெரியப்பா போக்சோவில் கைது.

கோவை; விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவர் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார் .இந்த நிலையில் திருப்பூரில் இருந்து இவரது மனைவியின் தங்கை தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவை க்கு வந்தார். அக்கா வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார் அந்த மாணவியுடன் பெரியப்பா என்கிற உறவு முறையை தொழிலாளி மீறினார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார் இது பற்றிய புகாரின் பேரில் ஆர். எஸ். புரம் போலீசார்போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொழிலா ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படை க்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தொழிலாளி மீண்டும் அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மாணவி காப்பகத்துக்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் மாணவியை தேடினர். அப்போது மாணவியை தொழிலாளி கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டாவது முறையாக தொழிலாளியை போக்சோவில் கைது செய்தனர். மாணவி மீண்டும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.