2.5 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.

கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் ஆகியோர் நேற்று அங்குள்ள யூனியன் அலுவலக ரோடு ,தண்ணீர் டாங்க் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2.5கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம், மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த அரவிந்தன் (வயது 25. )பூலுவாம்பட்டி சிவப்பிரகாஷ் ( வயது30) காரமடை பெட்டதாபுரம் அந்தோணி (வயது 36) என்பது தெரியவந்தது .3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.