கோவை மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவிலில் தமிழக சட்டசபை அறிவிப்பு 150 – இன் படி கொடி மரத்தின் அருகில் உள்ள தகரக் கோட்டையை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் வசந்த மண்டபம் கட்டும் பணி ரூ 1.50 கோடி செலவில் நடந்து வருகிறது. வசந்த மண்டபம் கட்டும் பணி வேகமாக நடந்து வருவதால் கொடிமரத்து பிள்ளையார் எனப்படும் பஞ்சமுக விநாயகர் சிலையை அகற்றிவிட்டு நேற்று புதிய விநாயகர் சிலை பாலாயம் செய்யப் பட்டது. மேலும் கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா நெருங்குவதால் 31 அடிஉயரத்தில் தேக்கு மரத்தால் ஆன புதிய கொடிமரமும் ,தீபக் தீபக் கம்பம் கோவில் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடிமரம் நடும்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷங் கள் எழுப்பினர். அப்போது வானில் கொடிமரத்துக்கு மேலே கருடன் வட்டமடித்தது. அதை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் உறுப்பினர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், சொக்கம்புதூர் கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி விஜயலட்சுமி மருதமலை இணைஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0