பொள்ளாச்சியில் 1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது.

கோவை மாவட்ட காவல்துறையினர். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோட்டூர் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருமலைச்சாமி மகன் பெருமாள் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.