மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு பள்ளி க்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில், துரை அதிமுக வட்டகழகப் பொருளாளர், தே.மு.தி.க ஆரோக்கியராஜ்,, அ.ம.மு.க மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஆகியோர் தலைமையில் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திராவிட முன்னேற்ற கழகத் தில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருச்சி மாநகரம் காட்டூர் பகுதி மற்றும் மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.கவில் தங்களை இனைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், ஒன்றிய கழகச் செயலாளர் பழனியாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry1
Dead0
Wink0