திருச்சி திருவெள்ளறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருவெள்ளறை ஊராட்சி தெற்கு சாலப்பட்டு கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அங்கு அமைக்கப்பட்டு இருந்த நட்சத்திர நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து நந்தவனத்தை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சிறப்பாக பணியாற்றிய தூய்மை உன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார் நிகழ்வில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் துணை ஆட்சியர் செல்வி கேந்திரியா உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார் திருவல்லாரை ஊராட்சி மன்ற தலைவர் லதா கதிர்வேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.