விளையாடிய போது சேலை கழுத்தில் இறுக்கி 10 வயது மாணவி பலி

கோவை துடியலூர் ,ஜி.என். மில்,பகுதியில் உள்ள எஸ். எம். ஆர். லேஅவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகள் பியோனா (வயது 10)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.இவர் அவரது வீட்டில் விட்டத்தில் சேலையைக் கட்டி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நேற்று விளையாடும்போது எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுக்கி மயங்கி விழுந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர் ,இது குறித்து தாயார்அனிதா துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.